யூ டியூபில் சாதனை படைத்த தளபதி விஜயின் மாஸ்டர் பட பாடல்!
நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடல் யூ-ட்யூபில் 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
கொரோனாவால் திகைத்து நின்றிருந்த திரைத்துறைக்கு இந்த வருட பொங்க/பெரும் நம்பிக்கை ஒளியேற்றிய படம் மாஸ்டர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் வசூலில் வாரிக் குவித்தது.
விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் படத்தில் அமைந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. ‘குட்டி ஸ்டோரி’, ‘க்ஷ் ‘வாத்தி ரெய்டு’, ‘ அந்த கண்ண பாத்தாக்க… என ஒவ்வொரு பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்த ‘வாத்தி கம்மிங்’ பாடல் இன்று வரை டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடல் தற்போது யூ-ட்யூபில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கொரோனா காலத்தில் வெளியான படங்களில் 150 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த முதல் பாடல் என்ற பெருமையை வாத்தி கம்மிங் பெற்றுள்ளது. இதனைத் தளபதி விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.