விவேக் வீட்டிற்கு நேரில் சென்று விஜய் அஞ்சலி

தமிழ் சினிமாவின் ’சின்ன கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக் கடந்த 17ஆம் தேதி, உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரையுலகினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

விவேக்கும், விஜய்யும் பல ஆரம்ப கால கட்டத்தில் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்ததுமே, நடிகர் விஜய் தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியாவிற்கு படப்பிடிப்பிற்கு சென்று விட்டார். இதனால், அவரால் விவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

படப்பிடிப்பை முடித்து, தமிழ்நாடு திரும்பியுள்ள விஜய், விவேக் வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது, திருவுறுவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தியப் பின் விவேக்கின் மனைவி மற்றும் மகளுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *