படப்பிடிப்புக்கு இடையே பிரசாந்த், யோகிபாபு செய்த வேலை… இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் பிரசாந்த் மற்றும் யோகி பாபு கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், யோகி பாபு உள்பட பலரும் நடித்து வருகின்றனர். தியாகராஜன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையே பிரசாந்த், யோகி பாபு மற்றும் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பிரசாந்த் பவுலிங் போட யோகி பாபு பேட்டிங் செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *