உதயநிதியுடன் இணையும் குக் வித் கோமாளி நட்சத்திரம்!

2019 ஆம் ஆண்டு ஆயுஸ்மான் குரானா நடிப்பில், அனுபவ் சின்ஹா இயக்கத்தில் ’ஆர்டிகிள் – 15’ படம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் தென்னிந்திய மொழி ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றியுள்ளார். அதில், முதலில் தமிழ் ரீமேக் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழில் அருண் காமராஜ் இயக்கி வரும் இந்த படத்தில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். உதயநிதியுடன் நடிக்கும் மற்றவர்கள் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நடத்திய ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த சிவாங்கி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.