வாயால் ஓவியம் வரையும் அதிசய மனிதர்!

உலகில் உள்ள அனைவரும் ஏதேனும் ஒரு விதத்தில் திறமைசாலிகளாக உள்ளனர். அதேபோல் தற்போது தமிழகத்தில் உள்ள ஒருவரின் அசாத்திய திறமை வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சிவனார்தாங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் செல்வம். இவர் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர், ஓய்வு நேரத்தில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல வகையான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.

முன்னதாக இவர் விவேகானந்தரின் ஓவியத்தை மணல்சிற்பமாக வரைந்திருந்தார். மேலும், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் ஓவியத்தை தனது நுனி நாக்கினால் வரைந்து அசத்தியுள்ளார்.

சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் தீவிர ரசிகரான இவர் அவரின் மரம் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியால் ஈர்க்கப்பட்டார். இதனால் மரம் நடுவது தொடர்பான ஓவியம் ஒன்றை தனது வாயினால் வண்ணச் சாயங்களை கொப்பளித்து ஓவியம் வரைந்து அனைவரையும் அசத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *