ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்கும் ரைசா!
அண்மையில் திரைப்பட நடிகை ரைசா தனடு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முகத்தில் காயத்துடன் இருக்குமாறு ஒரு படத்தை பதிவிட்டிருந்தார். தவறான மருத்துவ சிகிச்சை அளித்ததாக டாக்டர் பைரவி என்பவர் மீது புகாரளித்திருந்தார்.
ஆனால், டாக்டர் பைரவி ரைசா மருத்துவ சிகிச்சையை முறையாக பின்பற்றவில்லை. என்னை மிரட்டி என்னிடம் பணம் பறிக்க முயற்சிக்கிறார். சிகிச்சைக்காக அளிக்கப்பட்ட விளக்க படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார். தற்போது, பணம் கேட்டு மிரட்டுகிறார் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டாக்டர் பைரவி மீது ரைசா முறையாக வழக்குப் பதிவு செய்துள்ளார். மேலும், தன் முகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்காகவும் தவறான சிகிச்சைக்காகவும் ஒரு கோடி ரூயாப் நஷ்டஈடு வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
15 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகையைக் கொடுக்காவிட்டால் சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் மூலம் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெற வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.