ஓ.டி.டியில் வெளியாகிறதா துக்ளக் தர்பார்?
தமிழ்நாட்டில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகளி ஏற்கனவே 50 சதவீத பார்வையாளர்கள் தான் அனுமதிக்கப்படுகிறார்கள். தற்போது, தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கையால் இரவு நேர காட்சிகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதற்கு, திரையரங்க உரிமையாளர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தான் மக்கள் கூட்டமாக வருவர். இப்போது, அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால், முழு ஊரடங்க காலத்தைப் போல படங்கள் ஓ.டி.டி தளங்களை நோக்கி திரும்பியுள்ளது. விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக இருந்த, ‘துக்ளக் தர்பார்’ படமும் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகு என கூறப்பட்டுள்ளது.