பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா பரவல் தீவிரமாக பரவி வருவதால் நாட்டில் பலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் சினிமா பிரபலங்கள் பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில் இன்று நடிகை மனிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் தான் விரைவில் நலம் பெற்றுவிடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஒரு குப்பைக் கதை உள்ளிட்ட படங்களில் மனிஷா யாதவ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.