பெண் ஆட்டோ டிரைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. அதன்பின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

திரைப்படங்களில் நடிப்பதுடன் மட்டுமல்லாமல் ’சாம் ஜாம்’ என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பெண் ஆட்டோ டிரைவர் ஒருவரும் கலந்து கொண்டார்.

அதில், ”எனக்கு ஏழு சகோதரிகள் இருக்கிறார்கள். பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர்களைக் காப்பாற்றவே ஆட்டோ ஓட்டி வருகிறோன். ஆட்டோ ஓட்டுவதன் மூலம் கிடைக்கும் வருமானம் தனக்கு போதுமானதாக இல்லை” என்று தனது கஷ்டத்தைப் பகிர்ந்திருந்தார்.

இதைக் கேட்ட சமந்தா அவருக்கு உதவுவதாக வாக்களித்திருந்தார். அதன்படி, 12.5 லட்சம் ரூபாயில் கார் ஒன்றை வாங்கி அவருக்கு பரிசளித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சமந்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *