பணம் கேட்டு மிரட்டும் ரைசா! டாக்டர் பைரவி புகார்!

தனியார் தொலைக்காட்சி வழங்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 1 -ன் மூலம் தமிழகத்தின் பிரபலமடைந்தார் ரைசா வில்சன். அதன்பின், சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

அண்மையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம் ஒன்றைப் பதிவிட்டு தோல் மருத்துவர் தான் கூறுவதைக் கேட்காமல் தவறான சிகிச்சை அளித்ததால் தனது முகம் வீங்கி விட்டதாக பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், புகாருக்கு ஆளான மருத்துவர் பைரவி “ஏற்கனவே ஒரு முறை அவருக்கு இந்த சிகிச்சையை அளித்துள்ளேன். dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும். ஆனால், அவர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்” என்று பதிலுக்கு ரைசா மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் டாக்டரின் புகார் குறித்து விளக்கமளிக்க முடியாது என ரைசா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *