சிக்கலில் சிக்கிய பிக்பாஸ் நடிகர்… காவல் நிலையத்தில் புகார்!

தமிழ் சினிமா உலகத்தில் நகைச்சுவை நடிகராகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் பார்க்கப்படுபவர் நடிகர் டேனியல்.  இவர்’இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்துள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திவரும் பிக்பாஸ் போட்டியில் சென்று வந்த பின்பு மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். தற்போது நடிகர் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள வணக்கம்டா மாப்ள படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இந்த நிலையில்  இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பழகும் பெண்களிடன் தவறான முறையில் பேசி வந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து பலரும் அவரை வசைப்பாடி வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் டேனியல் சமூக வலைதளங்களில் தன்னை குறித்து அவதூறு பரப்பும் நோக்கத்தில் வெளியான வீடியோக்கள் புகைப்படங்கள், மீம்ஸ் போன்றவற்றை உடனடியாக நீக்காவிட்டால் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *