விஜய்க்கு பாடல் எழுதும் சிவா!

சின்னத்திரையில் இருந்து திரையுலகில் அறிமுகமாகி தற்போது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்ற அந்தஸ்தை சிவகார்த்திகேயன் பெற்றுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல், ’கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் பாடலாசிரியராகவும் அவதாரம் எடுத்தார் சிவா.

அதைத் தொடர்ந்து, டாக்டர் படத்திலும் பாடல் எழுதியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் புதிய படத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு ஜார்ஜியா சென்றுள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், விஜய்யின் இந்த படத்திற்கு சிவ கார்த்திகேயனும் ஒரு பாடம் எழுதவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், விஜய் படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனும் இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *