நடிகர் விவேக் மறைவு! திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் சினிமாவின் ’சின்ன கலைவாணர்’ என அழைக்கப்படும் நடிகர் விவேக் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால், அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கவலையில் உள்ளனர். திரைப்படங்களின் வழியாக சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் விவேக் என்றால் மிகையாகாது. நடிப்பைத் தாண்டி சமூகத்துக்காகவும் பல விஷயங்களைச் செய்தவர். மரம் வளர்த்தால் மழை வரும் என உணர்ந்து அனைவரையும் மரம் வளர்க்கத் தூண்டியவர்.
இவரது, மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது அஞ்சலியை நேரில் செலுத்தி வருகின்றனர். நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தினர்.
கவிஞர் வைரமுத்து, “எல்லோரையும் சிரிக்க வைத்த கலைஞன் இன்று அழவைத்துப் போய்விட்டானே” என தனது இரக்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.