அந்நியன் திரைப்படத்தின் கதை எனக்குதான் சொந்தம் – இயக்குநர் சங்கர் விளக்கம்!

அந்நியன் படத்தை இயக்குநர் சங்கர் இந்தியில் ரீமேக் செய்வதற்கு எதிர்ப்பு எழுந்த  நிலையில், அந்நியன் திரைப்பட கதை தனக்கே சொந்தம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த 2005ம் ஆண்டு விக்ரம், விக்ரம், சதா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அந்நியன். இந்தப் படத்தை இயக்குநர் சங்கர் இயக்கி, ஆஸ்கா் ஃபிலிம்ஸ் வி. ரவிச்சந்திரன் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் இந்தப் படத்தை பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து இந்தியில் ரீ – மேக் செய்யப்போவதாக இயக்குநர் ஷங்கர் நேற்று அறிவித்தார். மேலும்  இதனை ஜெயந்திலால் கடா என்பவர் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர். வி. ரவிச்சந்திரன், அந்நியன் படத்தின் கதைக்கான முழு உரிமையும் தன்னிடமே இருப்பதாகவும் அதனை இந்தியில் தயாரிக்கக்கூடாது என இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார்.

அவர் அனுப்பிய நோட்டீஸில் “அந்நியன் படத்தின் தயாரிப்பாளர் நான்தான். படத்தின் கதை உரிமை முழுவதையும் எழுத்தாளர் சுஜாதாவிடமிருந்து நான்தான் வாங்கியிருக்கிறேன். அதற்கான பணமும் அவருக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்தக் கதையின் முழுமையான உரிமையாளர் நான்தான். இந்த நிலையில், என்னுடைய அனுமதி இல்லாமல் அந்தக் கதையை தழுவியோ, மூலக்கருவைக் கொண்டோ, ரீ – மேக் செய்து படம் எடுப்பது சட்டவிரோதமாகும். முழு உரிமையும் என் வசம் உள்ள நிலையில் கதையை வைத்துக்கொண்டு இந்த விவகாரத்தில் இதற்கு மேல் ஏதும் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறீர்கள்” என ஷங்கருக்கு இது தொடர்பாக ரவிச்சந்திரன் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து விளக்கமளித்துள்ள இயக்குநர் ஷங்கர், அந்நியன் திரைப்படத்தின் முழுக்கதையும் எனக்கே சொந்தம் என்றும் அதனை இந்தியில் ரீமேக் செய்வதற்கு நான் யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *