பார்த்திபனுடன் கைகோர்க்கும் இசைப்புயல்

நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பார்த்தீபன் இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து, இவர் இயக்கும் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

அந்த படத்தைப் பற்றிய் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்து, தான் இரவின் நிழல் படத்தை இயக்கப்போவதாகவும் மேலும், அது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட இருப்பதாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அண்மையில், ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்தும் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் படத்திற்கு தான் இசையமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை, நடிகர் பார்த்திபனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதி படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *