அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்!
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ஆனால், படக் குழுவினருக்கு கொரோனா தொற்று பாதித்ததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அதன்பின், ரஜினியின் உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. தற்போது, ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். ஹைதராபாத்தில், படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.