இயக்குநர் சுந்தர்.சி-க்கு கொரோனா உறுதி!

தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.பெருந்தொற்றினால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தேர்தல் பிரச்சாரத்திற்கு பிறகு அரசியல்வாதிகள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் கொரொனாவால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் தமிழ் திரையுலகின் பிரபல இயக்குநரும்,நடிகை குஷ்பூவின் கணவருமான சுந்தர்.சி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கணவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும்,தனது கணவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *