முதல் நாள் வசூலில் அசூர வேட்டையாடிய கர்ணன்!

நடிகர் தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான கர்ணன் திரைப்படம் முதல் நாளில் ரூ.24 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கர்ணன். இந்த படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் நேற்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

மலையான நடிகையான ரஜிஷா, லட்சுமி ப்ரியா, யோகி பாபு, கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இத்திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளதாக பலரும்  பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று வெளியான கர்ணன் திரைப்படம் ஒரே நாளில் ரூ.24 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. மேலும்  ஓடிடி தள உரிமையை அமேசான் பிரைம் வீடியோ ரூ.21 கோடிக்கு பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *