கர்ணன் திரைப்படம் நாளை வெளியாகுமா?

கொரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது அது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனால், கர்ணன் படம் அறிவித்த படி வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் கலைபுலி தானு விளக்கமளித்துள்ளார். ” அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டுடன் திரையரங்குகளில் 50 சதவீதத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஆனால், கர்ணன் படம் அறிவித்த படி நாளை வெளியாவதில் சிக்கல் இல்லை. அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *