புளுசட்டை மாறனின் ‘ஆண்டி இந்தியன்’ படத்துக்கு தடை
ஒரு படம் வெளிவந்தவுடன், புளுசட்டை மாறனின் விமர்சத்திற்காகவே காத்திருப்பவர்களும் உண்டு. அவரின் விமர்சனங்களைப் பார்த்து இவ்வளவு சொல்றேல நீ ஒரு படம் எடுத்துக் காட்டு பார்ப்போம் என அவருக்கு சவால் விட்டவர்களும் உண்டு.
இதனை, ஏற்று தானும் ஒரு படத்தை புளுசட்டை மாறன் இயக்கிக் காட்டியுள்ளார். ‘ஆண்டி இந்தியன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், இசையமைப்பு என அனைத்தும் அவர் தான்.
பணிகள் அனைத்தும் முடிந்து இந்த படம் தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. ஏப்ரல் 5 ஆம் தேதி இந்தப்படத்தை தணிக்கை குழுவினர் பார்வையிட்டனர். மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட ஆன்டி இந்தியன் படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில் சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம், ”மறு தணிக்கைக்கு படம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் தடை நீங்கி படம் வெளியாகும்” என தெரிவித்துள்ளது.