கமலுடன் இணையும் பகத் பாசில்!

இயக்குநர் லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் இயக்கத்தில் ’விக்ரம்’ படத்தில் நடிப்பதாக இருந்தது. அடுத்து கமலஹாசன் சட்டமன்ற தேர்தல் வேலைகளில் பிசியானதாலும், இயக்குநர் லோகேஷ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாலும் படப்பிடிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டன.

லோகோஷ் நேற்று கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாலும், சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளதாலும் விக்ரம் பட வேலைகள் தொடங்கப்பட உள்ளன.

முதலில், விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் தான் வில்லனாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அவர் ‘ருத்ரா’ பட வேலைகளில் பிசியாக உள்ளதால் அவருக்குப் பதிலாக மலையாள நடிகர் பகத் பாசில் அந்த கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை, பகத் பாசில் தனியார் இணைய ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், படக்குழு இதுவரை எந்த வித் அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *