சைக்கிளில் வந்து பெட்ரோல் விலையை விமர்சிக்கிறாரா விஜய்?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் அமைதியாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடைமையை தவறாமல் ஆற்றி வருகின்றனர்.
நடிகர் விஜய்யும் தனது வாக்கை அளிப்பதற்காக தனது தொகுதிக்கு சென்றார். அப்போது, வீட்டிலிருந்து சைக்கிளில் சென்றார். தமிழகத்தில், ஏற்கனவே பெட்ரோல் விலை உச்சம் தொட்டு இருப்பதாக பலரும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்திருப்பது மக்களிடம் அவர் பெட்ரோல் விலை உயர்வை தான் குறிக்கிறாரா என பேசு பொருளாகி வருகிறது.