ரசிகரிடம் கோபப்பட்டு பின் மன்னிப்பு கேட்ட அஜித்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்க திரைபிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர். அவ்வாறு, வருபவர்களிடம் வாக்களிக்க வரும் மக்கள் செல்பி எடுத்துக் கொள்ள விரும்புவர். வாக்களிக்க வந்த அஜித்திடமும் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க விரும்பி அவரை நெருங்கிச் சென்றார்.
#Thala #Ajith apologized to the selfie-person hindering his way to cast vote.
— Karthik Ak (@karthikakphoto) April 6, 2021
The Man of Admiration#ThalaAjith 🙏 pic.twitter.com/VmGbNH29b2
அவர் மாஸ்க் அணியாமல் இருந்ததால் அஜித் அவரின் செல்போனை புடுங்கிச் சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, உள்ளே சென்று வாக்களித்து விட்டு திரும்பிய அஜித், நீங்கள் மாஸ்க் அணியாமல் உள்ளீர்கள் என கூறி சென்போனை திரும்ப கொடுத்து விட்டு மன்னிப்பும் கேட்டுச் சென்றார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.