நடிகர் அஜித் அணிந்து வந்த மாஸ்க்கால் பரபரப்பு

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளிலும் இன்று நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித் அவரது மனைவி அஜித் உள்ளிட்ட திரை பிரபலங்கள் தங்களது தொகுதிகளில் வாக்களித்து வருகின்றனர்.
நடிகர் அஜித் அணிந்து வந்த மாஸ்க் தான் தற்போது பேசு பொருளாகி உள்ளது. கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள மாஸ்க் அணிந்து வந்ததால் அவர் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என இணையத்தில் பலர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.