கொரோனா பாதித்த அக்சய் குமார் மருத்துவமனையில் அனுமதி!

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், தற்போது ராம்சேது என்கிற படத்தில் நடித்துவருகிறார். ராமஜென்ம பூமியை மையமாக வைத்து உருவாகும் இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை நிஜமான கதைக்களமான அயோத்தியில் படமாக்கி வருகிறார்கள்.

அண்மையில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.

மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்யுமாறு தெரிவித்திருந்தார். இந்நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அக்‌ஷய் குமார் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் ராம்சேது படத்தில் நடித்துக் கொண்டிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை நிலையில், 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *