நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். நடிப்பில் மட்டுமல்லாமல் தற்போது அரசியலிலும் கலக்கி வருகிறார்.

2014 ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2019 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக அத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினரானார்.

இந்நிலையில், ரோஜாவுக்கு கர்ப்பப்பை பாதிப்பு உள்ளதால் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கணவரும் இயக்குநருமான செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ரோஜாவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. தற்போது நலமாக இருக்கிறார். தேர்தல் முடிந்த பின் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்றிருந்தோம். ஆனால், பாதிப்பு அதிகமாகி விட்டதால் இப்போதே செய்து விட்டோம்.

இரண்டு வாரங்களுக்கு யாரையும் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, யாரும் வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *