ஒரு வேளை நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதோ?
தமிழ் சினிமாவில் நட்சத்திர காதல் ஜோடிகளாக ’லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் வலம் வருகின்றனர். ஆனால், இவர்களின் திருமணம் பற்றிய அறிவிப்பு மட்டும் வெளிவராமல் இருந்தது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுளார். அதில், நயன்தாரா கையில் மோதிரத்துடன் இருக்கிறார்.
மேலும், அந்த புகைப்படத்திற்கு ”விரலோடு உயிர் கூட சேர்த்து” என தலைப்பிட்டுள்ளார். இதனால், ஒருவேளை இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து விட்டதோ என ரசிகர்களை யோசிக்க வைக்கிறது.