விஜய்யின் நாயகி பூஜா ஹெக்டே!

இயக்குநர் நெல்சன், தற்போது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் டாக்டர் படத்டை இயக்கி முடித்துள்ளார். அடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜயின் 65 ஆவது படத்தை இயக்குகிறார். அதில், நாயககியாக யார் நடிக்கப் போகிறார் என உறுதிசெய்யப்படாமல் இருந்தது.

பூஜா ஹெக்டே, தமிழில் முகமூடி படத்தில் நடித்திருந்தார். பிறகு, தெலுங்கி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பூஜா தான் ’விஜய் 65’ படத்தில் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இன்று, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய் 65 படத்தில் பூஜா ஹெக்டே தான் நாயகி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *