சடலமாக மீட்கப்பட்ட விருச்சககாந்த்!

காதல் படத்தின் மேன்சனில் தங்கியிருக்கும் இளம் இயக்குநரிடம் வாய்ப்பு கேட்கச் செல்லும் சிறிய கதாபாத்திரத்தில் பாபு நடித்திருப்பார். மேலும், அந்தப்படத்தில் ரஜினி போல் தானும் சினிமாவில் உயர வேண்டும் என்ற ஆசையில் ராசிவிருச்சம் என்ற தனது பெயரை விருச்சககாந்த் என மாற்றிக் கொண்டதாக தெரிவித்திருப்பார்.
ஆனால், காதல் படத்திற்குப் பிறகு அவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வறுமையில் வாடிய அவருக்கு திரை பிரபலங்கள் உதவி செய்து வந்தனர். கொரோனா பொது முடக்கத்துக்குப் பிறகு, அவரின் நிலை என்ன என்றே தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், அவரின் பெற்றோர்கள் அண்மையில் இறந்த நிலையில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இரவில் ஆட்டோவில் தூங்கச் சென்ற அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.