என்னை படத்திலிருந்து வெளியேற்றத் தான் பரிந்துரைப்பார்கள் – கங்கனா உருக்கம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்திருந்தார். அவரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில், கங்கனா உருக்கமாக பேசியுள்ளார். அதில். “இன்று எனக்கு 34 ஆவது பிறந்தநாள். இந்த பூமிக்கு என்னை கொண்டு வந்த என் பெற்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவி’ படத்துக்கு விஜயேந்திர பிரசாத் சார் என்னைப் பரிந்துரை செய்யவில்லை என்றால் இந்தப் பயணம் தொடங்கியிருக்காது. வழக்கமாக என்னைப் படத்திலிருந்து வெளியேற்றத்தான் பரிந்துரை செய்வார்கள்.

அரசியல் என்றால் எனக்கு மிகவும் பயம். அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல் எனக்குப் பரிச்சயமில்லை. பிறகு, ஏன் என்னை தேர்வு செய்தீர்கள் என்று கேட்டதற்கு என் திறமை மீது நம்பிக்கை இருப்பதாக கூறினார்கள். என் திறமைகள் மீது என்னை நம்பிக்கை கொள்ள வைத்த ஒரு நபர் அவர்தான் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். ஒரு நடிகையை எப்படி நடத்த வேண்டும் என்பதை இயக்குநராக நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *