காஷ்மீரில் ஜமாய்க்கும் ஆண்ட்ரியா
நடிகையாக நடிப்பிலும், பாடகியாக தன் குரலாலும் தமிழ் சினிமாவில், ஆண்ட்ரியா தனக்கென தனி இடம் பிடித்துள்ளார். ஆனாலும், முதலில் பாடகியாகவே தன் திரைப்பயணத்தை ஆண்ட்ரியா தொடங்கினார்.
பின், பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில், அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரிடமும் பாராட்டைப் பெற்றது.
அதன் பின் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா மற்றும் மாஸ்டர் படங்களில் நடித்திருந்தார். தற்போது காஷ்மீர் சென்றுள்ள அவர் அங்கு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.