அடுத்தடுத்த இரண்டு மரணங்கள் ; எஸ்.பி ஜனநாதனின் பாசமலர் தங்கை
தனது முதல் படமான இயற்கை படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குநர் எஸ்.பி ஜனநாதன். பிறகு ஈ , பேராண்மை, பொதுவுடமை என்ற புறம்போக்கு போன்ற படங்களை இயக்கி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.
தற்போது, விஜய் சேதுபதி – ஸ்ருதிஹாசன் நடிப்பில் ’லாபம்’ படத்தின் இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தார். மதிய உணவு இடைவேளையில் சாப்பிட சென்றவர் அதன்பின் வரவே இல்லை. கடந்த ஞாயிற்றுக் கிழமை மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார்.
அவர் இறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், அவரது இறப்பின் சோகம் தாளாமல் அவரது தங்கையும் மாரடைப்பால் இன்று இறந்துள்ளார். அடுத்தடுத்த இரண்டு மரணங்களால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.