புல்லட் பாண்டியாக மாறிய பிரபல நடிகை!

தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை பிரகதி. தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகும் அரண்மனைக்கிளி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சீரியல் மட்டுமல்லாது யோகா, உடற்பயிற்சி என பலவற்றை சிறப்பாக செய்து தன்னை இணையத்தில் தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார். புதுமையான முயற்சிகளை எந்தவிதமான சங்கடமும் இல்லாம் தைரியமாக இவர் செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை கூட்டியுள்ளது.

இந்த நிலையில் சீரியல் சூட்டிங்கிற்காக சென்னைக்கு வந்தள்ள அவர், செட்டில் வைத்து புல்லட் பைக் ஓட்டும் காட்சி வைரலாகியுள்ளது. பெண்ணாக இருந்தாலும் அசால்டாக, ஸ்டைலாக புல்லட் ஓட்டுவது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் இவர், தனது மகனுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *