ஆஸ்கார் பட்டியலில் இருந்து வெளியேறியது ’சூரரைப் போற்று’

திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது என்பது தங்கத்தின் மீது பதித்த வைரத்தைப் போன்றது. ஒரு படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெறும் போது, அதற்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

கடந்த ஒராண்டாக கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன. இதனால், பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானது. இது, ஓடிடி தளங்களில் வரும் படங்கள் தரமானதாக இருக்காது என்ற நிலையை மாற்றியது. தமிழில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று படம் இதற்கு உதாரணம்.

இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சிம்ப்ளி ஃப்ளை என்ற புத்தகத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கொரோனாவால் ஆஸ்கார் விருதுகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டது. அதன்படி, ஓடிடி தளங்களில் வெளியான படங்களும் ஆஸ்கார் போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுப்பிரிவில் பொதுப்பிரிவில் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் படக்குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டது.

ஆஸ்கார் குழுவினரின் 366 படங்கள் கொண்ட இறுதி பட்டியலில் சூரரைப்போற்று படம் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய 3 பிரிவுகளில் இடம்பிடித்திருந்தது. ஆனால், வாக்குப்பதிவின் மூலம் தேர்வு செய்யப்பட்டும் இறுதிப்பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் எந்த பிரிவிலும் தேர்வாகவில்லை. இதனால், ஆஸ்கார் போட்டியில் இருந்து சூரரைப்போற்று படம் வெளியேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *