’திரெளபதையின் முத்தம்’ பாடல் வெளியீடு!

மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பகுதியை படமாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். டிசம்பர் 9-ம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இத்திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் களமிறங்கியிருக்கும் படக்குழு மூன்றாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளது.‘தட்டான் தட்டான்’ என்று தொடங்கும் இந்தப் பாடல் காதல் பாடலாக அமைந்துள்ளது. யுகபாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலை தனுஷ் மற்றும் மீனாட்‌சி இளையராஜா பாடியுள்ளனர். கர்ணன் படத்தின் முதல் பாடலான ‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற கிடாக்குழி மாரியம்மாள் பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதேபோல் இரண்டாவது பாடலான ‘பண்டாரத்தி புராணம்’ பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘கர்ணன்’ திரைப்படத்தில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, 96 புகழ் கௌரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விரைவில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…