LOVE விற்கு புது விளக்கமளித்த சதீஸ்!

திண்டுக்ககல் பழனி சாலையில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு பேசிய திரைப்பட நடிகர் சதீஷ், “பண்ணவே கூடாத ஒரு விசயம் இருக்கிறதென்றால் அது லவ். அது நமக்கு தேவையில்லாத சுமையை உருவாக்கும். அது படிப்பைக் கெடுக்கும். உங்களின் நல்ல நட்பைக்கெடுக்கும். பெற்றோர்களுக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும்.

சாதி ஒழிவதற்கு காதல் திருமணம் தான் கரெக்ட் என்று சொல்வார்கள். சாதியை ஒழிக்க காதல் திருமணம் தான் என்றில்லை. அண்ணன் தங்கச்சியாக, அக்கா தம்பியாக பழகலாம் நல்ல நண்பர்களாக பழகினாலே சாதியை ஒழிக்கலாம்.

எல் (L) என்றால் லாஸ், ஓ (O) என்றால் ஒன்னும் இல்லை. வி (V) என்றால் வேணாம். இ (E) என்றால் எதுக்கு?” என்று காதலுக்கு புது விளக்கமளித்தார். அரசு சாதிமறுப்பு காதல் திருமணங்களை ஊக்குவித்து அரசு வேலைகளில் முன்னுரிமையும் சமூகநலத்துறை மூலமாக அவர்களுக்கு திருமண உதவிதொகையும் கொடுத்து வரும் நிலையில் காதல் திருமணத்துக்கு எதிராக நடிகர் சதீஷ் தனது கருத்தை மாணவர்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் நடிகர் சதீஷ் நடித்திருந்த ‘பூமி’ திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக ஹர்பஜன் சிங் உடன் ஃபிரெண்ட்ஷிப், ரஜினிகாந்த் உடன் அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சதீஷ்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…