பெரியார் அவமதிப்பா!செல்வராகவன் விளக்கம்

சமீபத்தில் செல்வராகவன் இயக்கிய ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியானது. அதில் சைக்கோ கொலைகாரன் ஆக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். அவர் புகைப்படத்தில் ராமசாமி என்று பெயரிடப் பட்டிருந்தது.
இதற்கிடையே சமீபத்தில் செல்வராகவன் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் நீங்கள் ராமசாமி என்று ஒரு தனி நபரை குறிப்பிட்டு தானே பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு செல்வராகவன் ஆம் என்று பதில் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பெரியார் ஆதரவாளர்களிடமிருந்து எதிர் வினைகள் வரத் தொடங்கின. இந்நிலையில் தற்போது இது குறித்த விளக்கத்தை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். நெறியாளர் கேட்ட கேள்வி புரியாமல் ஆம் என்று சொல்லி விட்டதாகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு, மன்னிப்பு கோரியுள்ளார்.