பிரபல கதாநாயகியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறாரா தமன்னா?

நடிகர், நடிகைகள் வாழ்க்கை வரலாறு சினிமா படங்களாக வந்து வரவேற்பை பெற்றுள்ளன. மறைந்த நடிகை சில்க் சுமிதா வாழ்க்கை கதையில் வித்யாபாலன் நடித்து தேசிய விருது பெற்றார்.

இதுபோல் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. என்.டி.ராமராவ், சஞ்சய்தத், கவர்ச்சி நடிகை ஷகிலா ஆகியோர் வாழ்க்கை வரலாறும் படங்களாக வந்தன.


மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி பெயரில் படமாகியுள்ளது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். விமான விபத்தில் இறந்த சவுந்தர்யா, நடிகையும் இயக்குனருமான விஜய நிர்மலா ஆகியோர் வாழ்க்கையும் படமாக உள்ளது.

இந்த வரிசையில் பழம்பெரும் நடிகை ஜமுனாவின் வாழ்க்கை வரலாறையும் படமாக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இவர் 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தமிழில் மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம், பொம்மை கல்யாணம், மருதநாட்டு வீரன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

ஜமுனா வாழ்க்கை கதையில் அவரது கதாபாத்திரத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…