தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் சாதித்து வருபவர் அஜித் – ஓபிஎஸ் புகழாரம்

சென்னையில் நடைபெற்ற 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி.

அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் அஜித்குமாரை பாராட்டி வாழ்த்தியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி மார்ச் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நடைபெற்றது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள்.இந்த போட்டியில் நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *