புதிய ’பால்காரன்’ வார்னர்!

‘Reface’ ஆப் மூலம் முகத்தை மாற்றி வெளியிடும் தொழில்நுட்பம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்காகவே உருவாக்கப்பட்டது போல் இருக்கிறது. அதை வைத்து அவர் செய்யும் சேட்டைகள் அப்படி.

ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான புட்டபொம்மா பாடலுக்கு நடனமாடி அதனை சமூகவலைதளத்தில் பதிவேற்றினார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அந்தப் பாட்டு ஏற்கெனவே ஹிட் என்றாலும் வார்னர் அதனை மேலும் சூப்பர் ஹிட்டாக்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டிக்டாக்கில் வார்னருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. ரசிகர்களுடன் டிக்டாக் செய்து அதனையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவேற்றி வந்தார். இந்நிலையில்தான் அடுத்த அப்டேட்டாக ரீஃபேஸ் அவதாரம் எடுக்கத்தொடங்கினார். மகேந்திர பாகுபலி, ஜோதா அக்பர், ஹல்க், என ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை எதையும் விட்டுவைக்காமல் ரீஃபேஸ் ஆப் மூலம் அட்டகாசம் செய்யத் தொடங்கினார் வார்னர். ‘வீ லைக் யூ மேன்’ என இந்திய ரசிகர்கள் வார்னருக்கு ஆதரவு அளிக்கத் தொடங்கினர்.

ரசிகர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப வார்னர் வீடியோக்களை பதிவேற்றுவார். வார்னரின் இன்ஸ்டாபக்கங்கள் ரசிகர்களால் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்த வார்னர் மீண்டும் அவதாரம் எடுக்கத் தொடங்கிவிட்டார். “வந்துட்டேன்னு சொல்லு..திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”எனும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஹிட் பாடலான வந்தேண்டா பால்காரன் பாடலை வார்னர் ரீஃபேஸ் ஆஃப் மூலம் பதிவேற்றியுள்ளார். இதன்மூலம் வார்னர் புதிய பால்காரனாகி உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *