தமிழ் படத்தில் தென்கொரிய நடிகை?

எந்திரன் 2 படத்திற்குப் பின் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வந்தார். படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, கமலுக்கு காலில் நடந்து முடிந்த அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் தொடங்க அதற்கு பின் ‘இந்தியன் 2’ ஷூட்டிங் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. கமல்ஹாசன் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிஸியாக இருக்கிறார். எனவே தேர்தல் முடிந்தவுடன் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்படுகிறது. இதனிடையே ஷங்கரின் அடுத்த பட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் 50-வது படத்தை ஷங்கர் இயக்க ராம் சரண் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க தென் கொரிய நடிகை பே சூஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உறுதியாக அவர் ராம் சரணுக்கு ஜோடியாக நடிக்கிறாரா அல்லது வேறு ஏதேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை விரைவில் படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அவர் இந்தியன் 2 படத்தில் இடம்பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் படக்குழு அதை உறுதி செய்யவில்லை.

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் ஷங்கர் – ராம் சரண் இணையும் படத்துக்கும் அவரே இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழக மீனவர் சுட்டு கொலை! அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்… முஸ்லிம் லீக் அபூபக்கர்

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பாஜக…
marina

தமிழக கர்நாடக எல்லையில்  பதற்றமான சூழ்நிலை…! ஏராளமான போலீசார் குவிப்பு 

மாதேஸ்வரன் மலையில்  நடைபெறும் சிவராத்திரி விழாவை ஒட்டி  மேட்டூரில் இருந்து செல்லும் பேருந்துகள்…