விமலின் மனைவிக்கு சீட் கொடுக்காதீங்க… ஸ்டாலினிடம் கதறும் தயாரிப்பாளர்!

நடிகர் விமலை நம்பி தான் நடுத்தெருவில் நிற்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் அளித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் திமுக தலைவர் ஸ்டாலினிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், மன்னர் வகையரா படத்தை தயாரிக்க நடிகர் விமல் என்னிடம் ரூ. 50 லட்சம் கடன் கேட்டார். வீட்டை அடமானம் வைத்து அந்த பணத்தை அவரிடம் கொடுத்தேன்.
அதற்காக அவர் ரூ. 80 லட்சம் காசோலை கொடுத்தார். தான் சொல்லும் தேதியில் வங்கியில் காசோலை கொடுத்து பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு அவர் கூறினார். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடித்துவிட்டு, விமல் சொன்ன தேதியில் காசோலையை வங்கியில் செலுத்திய போது, பணமில்லாமல் திரும்பியது.
இதனல அதிர்ச்சி அடைந்த நான் விமலிடம் சென்று இதுகுறித்து விசாரித்தேன். அப்போது அவர் பொறுமை காக்கும்படி சொன்னால். பலமுறை விமலிடம் ஒதுகுறித்து கேட்டபோதும், பணம் திரும்ப தரவில்லை. ரூ. 50 லட்சம் கடனால் என் வீட்டை இழந்துவிட்டேன். தற்போது குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கிறேன்.
மணப்பாறை தொகுதியில் விமலின் மனைவி அக்ஷயா போட்டியிடுவதாக அறிந்தேன். மோசடியின் மொத்த உருவமாக இருக்கும் நடிகர் விமலின் மனைவிக்கு சீட் கொடுத்தால், திமுக கட்சியை நம்பும் என்னைப் போன்றோர் வாழ்க்கையை இழக்கவேண்டியதை தவிர வேறில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அண்மையில் நடிகர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த நடிகர் விமல், தனது மனைவி அக்ஷயாவுக்கு திமுக சார்பில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என விருப்ப மனு அளித்தார். அதற்குள் தயாரிப்பாளர் அவர் மீது முறையிட்டுள்ள இந்த மோசடி புகார் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.