வருமான வரித்துறை சோதனைக்கு ராகுல் கண்டனம்

பாலிவுட் திரையுலகில் டாப்ஸி முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நேற்று இவரது வீட்டிலும் இயக்குநர் அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதற்கு பெரும்பாலோனர் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அண்மையில், டெல்லியில் நடைபெற்ற விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாக டாப்ஸி, அனுராக் காஷ்யப் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருந்தனர்.

இதனயடுத்து, காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வருமான வரித் துறையை மத்திய அரசு தங்கள் சுயநலத்துக்காக பயன்படுத்தி வருவதாக கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *