டீசர் எப்போது? கர்ணன் அப்டேட்

மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கர்ணன்’. இதில் லால், ராஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கலைப்புலி S.தாணு தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். திருநெல்வேலி அருகே கிராமம் போன்ற செட் அமைத்து படத்தின் பெரும்பகுதியை மாரி செல்வராஜ் படமாக்கியுள்ளார். டிசம்பர் 9-ம் தேதியுடன் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. இதையடுத்து, இத்திரைப்படம் ஏப்ரல் 9-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவித்த படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கண்டா வரச் சொல்லுங்க, பண்டாரத்தி புராணம் உள்ளிட்ட இரண்டு பாடல்களை வெளியிட்டது.

பரியேறும் பெருமாள் திரைப்படம் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஜனரஞ்சகமாக பேசி இருந்ததன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *