பகத்க்கு படப்பிடிப்பில் விபத்து!

பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசிலுக்கு படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சிறந்த 5 நடிகர்கள் பட்டியலில் ஃபக்த பாசில் நிச்சயம் இடம் பெறுவார். அந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலம் திரைத்துறையினரையும், மக்களையும் கவர்ந்துள்ளார் இவர்.

தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் மட்டும் நடித்துள்ளார். ஆனால் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து எண்ணற்ற ரசிகர்களை தன்னகத்தே வைத்துள்ளார் இவர்.

இவர் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அவரது மனைவி நஸ்ரியாவுடன் சேர்ந்து அந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஃபக்த் பாசில் பிரபல இயக்குநர் ஃபாசிலின் மகன். இவரது நடிப்பில் மாலிக் என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது.

பிரேமம் இயக்குநர் அல்போன்ஸ் இயக்கத்தில் பாட்டு என்ற பாடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஃபகத் பாசில். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

கால்ஷீட் நிரம்பி பிஸியாக இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். உலக நாயகன் கமல்ஹாசன், இந்தியாவின் சிறந்த நடிகர் ஃபகத் பாசில் என்று கூறியிருக்கிறார். இவர் தற்போது, பட ஷூட்டிங்கின் போது கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதில் அவருக்கு மூக்கு மற்றும் முகத்தில் அடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஃபகத் பாசில் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருத்து மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *