சூரிக்கு அப்பாவாக விஜய் சேதுபதி!

தமிழில் ‘மாஸ்டர்’, தெலுங்கில் ‘உப்பென்னா’ ஆகியப் படங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது பாலிவுட் உட்பட மற்ற திரையுலகிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபது, ஒரு படத்தில் நடிக்கும் போது, தோற்றத்தைப் பற்றி எல்லாம் கவலைபட மாட்டார். அந்தக் கதாப்பாத்தின் தன்மையைப் பொருத்து தான் அவரது தேர்வு இருக்கும். சூப்பர் டீலக்ஸ் படத்தில் மூன்றாம் பாலினத்தவர், ஆரஞ்சு மிட்டாய் படத்தில் வயதானவர் என பன்முகம் கொண்டவர்.

தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் படத்தில் சூரி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படம், ஜெயமோகன் எழுதிய ’துணைவன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதில் சூரிக்கு அப்பாவாக இயக்குநர் பாரதிராஜா நடிக்க இருந்தது. இந்நிலையில், அவருக்குப் பதிலாக விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இருப்பினும், நாவலில், வயதானவர் ஹீரோவுக்கு அப்பா இல்லை. ஒரு கொலைகாரனாக இருந்து பின்னர், கதாநாயகனுக்கு தந்தையாக மாறுவார். சூரிக்கு ஜோடியாக ஜி.வி. பிரகாஷின் தங்கை, பவானி ஸ்ரீ நாயகியாக நடித்து வருகிறார்.