கங்குபாயாக அலியா பட், யார் இவர்?

பாலிவுட் படங்களில், அலியா பட் வித்தியாசமான கதைக்களங்களில் நடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர், தற்போது ’கங்குபாய் கதியாவாடி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மும்பையின் பாதாள உலகமாக செயல்பட்ட மாஃபியா தலைமைகளில் ஒருவராக 60-களில் மும்பை காமாட்டிபுராவில் கோலோச்சிய கங்குபாய் கொத்தேவாலி என்ற கதாபாத்திரத்தில் அலியா பட் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மும்பையின் சிவப்பு விளக்குப்பகுதியாக அறியப்பட்ட காமாட்டிபுராவின் தலைவியாக கோலோச்சிய கங்குபாய் கொத்தேவாலி,குஜராத்தில் பிறந்தவர். தனது தந்தையிடம் கணக்கராக பணிபுரிந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பைக்கு வந்தவர்.

திரைப்படங்களில் நடிக்கும் ஆசையுடன் இருந்த கங்குபாயை, 500 ரூபாய்க்காக பாலியல் தொழில் செய்வதற்கு, கங்குபாயின் கணவர் விற்றுவிட்டுச் சென்றுவிட்டதாக, அவரது வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்த ஹுசைன் ஜைதி குறிப்பிடுகிறார்.

தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய இருவரைப் பற்றி, குற்றவாளிகளின் முதலாளியாக இருந்த டான் கரீம் லாலாவிடெமே முறையிட்டு, கரீம் லாலாவின் அன்பைப் பெற்று அவரின் தங்கையாக மாறி, மும்பை காமாட்டிபுராவையே தனது கைப்பிடிக்குள் வைத்திருந்த கங்குபாய் கொத்தேவாலிதான், அலியா பட்டின் ’கங்குபாய் கதியாவாடி’ திரைப்படத்தின் இன்பிரேஷன். பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலியின் படைப்பு என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…