‘ஆரம்பிக்கலாங்களா’ சாதனை படைத்த விக்ரம் பட டீசர்!

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் விக்ரம். இதில் ஹீரோவாக நடிகர் கமல் ஹாசன் நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படம் கமலின் 232-வது திரைப்படமாக உருவாகிறது.அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

கடந்த இரண்டு மாதங்களாக விக்ரம் படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் மிகவும் தீவிரமாக நடந்து வருவதாக சமீபத்திய நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார் லோகேஷ். முன்னதாக விக்ரம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதில் கமல் குறிப்பிடும் ‘ஆரம்பிக்கலாங்களா’ என்ற வார்த்தை இணையத்தில் ட்ரெண்டானது.

இந்நிலையில், விக்ரம் படத்தின் டீசர் 20 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது. அதோடு விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…