அடுத்த படத்திற்கு தயாரான ஆர்.ஜே. பாலாஜி… ரீமேக் ஆகும் வசூல் சாதனைப் படம்!
பாலிவுட்டில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைப் புரிந்த ’பாதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கின் உரிமையை ஆர்.ஜே பாலாஜி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை நயன்தாரா நடிப்பில், கடந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்தத் திரைப்படத்தை இயக்கி முன்னனி கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி.
சமீபகாலமாக மற்ற மொழிகளில், சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படங்களை ரீமேக் செய்வதில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் ரீமேக் செய்யப்படும் சில படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றது. தற்போது ஆர்ஜே பாலாஜியும் இந்த ரீமேக் முயற்சியை கையில் எடுத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில் திரையுலகில் வெளியான ‘பாதாய் ஹோ’ என்கிற காமெடி படத்தை தான் ரீமேக் செய்ய உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி.
இந்த படம் சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு. ‘வீட்ல விசேஷங்க’ என்று டைட்டில் வைக்க பாலாஜி திட்டமிட்டுள்ளார். இந்த டைட்டில் கே.பாக்யராஜ் இயக்கி உள்ள ஒரு திரைப்படத்தின் டைட்டில் என்பதால் இந்த தலைப்புக்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.