நீங்க மாஸ் அருள் அண்ணாச்சி
பொதுவாக, ஜவுளிக்கடை விளம்பரப் படங்களில் சினிமாவில் பிரபலமான நடிகர், நடிகைகள் நடிப்பது தான் வழக்கம். ஆனால், தமிழ்நாடு எங்கும் பல கிளைகளுடன் ’சரவணா ஸ்டோர்ஸ்’ பரந்து விரிந்துள்ளது.
இந்த கடைகளின் விளம்பரப் படங்களில் அதன் அடுத்த ஓனர் அருள், தானே நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். விளம்பரப் படங்களில் நடித்து விட்டார், அடுத்து சினிமாவில் தான் நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்ததை அருள் அண்ணாச்சி உண்மையாக்கியுள்ளார்.
இவருக்கு ஜோடியாக மிஸ் இந்தியா பட்டம் வென்ற ‘கீத்திகா திவாரி’ என்பவர் நடித்து வருகிறார். இரட்டை இயக்குநர்களான ஜேடி- ஜெர்ரி இயக்குகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளில் எடுக்கப்பட்டப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் மாஸான சண்டை காட்சிகளில் அருள் நடிப்பது போல் ஸ்டில்கள் உள்ளன.